ஈரோடு: விவசாயிகள் மேற்கொண்டுள்ள விழிப்புணர்வுப் பிரசாரப் பயணத்தை தடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் என தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத ஒரே பிரதமர் மோடி தான் என்றார். "தமிழகத்தை பாலைவனமாக மாற்ற வேண்டும் என்பதில் ஒரு தரப்பு உறுதியாக உள்ளது. தமிழக விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டாலும் பரவாயில்லை, கர்நாடகாவில் எப்படியேனும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என மோடி விரும்புகிறார்," என்றும் அய்யாக்கண்ணு மேலும் சாடினார்.
அய்யாக்கண்ணு: உச்சநீதிமன்றத்தை மதிக்காத ஒரே பிரதமர் மோடி
1 mins read

