சூரிய மின்சக்தி பயனீட்டுக்காக நிதி உதவி

சூரிய மின்சக்தி பயனீட்டுக்காக நிதி உதவி

1 mins read
83bdbcfd-93e2-4b1c-973f-ec3f5f5c94ec
-

புதுடெல்லி: சூரியஒளி மின்சக்தி உற்பத்தி மற்றும் பயனீட்டை அதிகப்படுத்துவதற்காக சலுகை யுடன் கூடிய நிதி உதவி தேவை என்றும் இந்தியாவில் 2022ல் 175 ஜிடபிள்யூ சூரிய மின்சக்தி உருவாக்கப்படும் என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து இருக்கிறார். இதற்காக 10 அம்ச செயல்திட் டத்தை மோடி வெளியிட்டார். சூரிய மின்சக்தி தொழில்நுட் பத்தை எல்லா நாடுகளுக்கும் எளிதாகக் கிடைக்கச்செய்வது, விதிமுறைகளை உருவாக்குவது, உன்னத நிலையங்கள் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவது முதலான பலவும் அவற்றில் அடங்கும்.

புதுடெல்லியில் 23 நாட்டுத் தலைவர்கள் மற்றும் 10 நாடுகளின் பேராளர்கள் கலந்துகொள்ளும் அனைத்துலக சூரியசக்திக் கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு நேற்றுத் தொடங்கியது. அதைத் தொடங்கிவைத்து பிரதமர் உரை யாற்றினார். பருவநிலை மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தின் அடிப் படையில், ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும் சில ஐரோப்பிய நாடுகளும் ஒன் றிணைந்து சூரியசக்திக் கூட்ட மைப்பை உருவாக்கி உள்ளன.2018-03-12 06:25:00 +0800