பிரபலமான மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத் தில் இடம்பெறும் முதல் தமிழர் என்ற பெருமையைப் பெறவுள்ளார் நடிகர் சத்யராஜ். ராஜமௌலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளி வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பாகுபலி' படத்தில் 'கட்டப்பா' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித் திருந்தார். அந்த 'கட்டப்பா' தோற்றத்தில் சத்யராஜின் மெழுகுச்சிலை அமைக்கப்படவிருப்பதாகத் தக வல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும், அந்த மெழுகுச் சிலை எந்த நாட்டில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப் படும் என்பது போன்ற தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தம் தந்தைக்கு மெழுகுச்சிலை வைக்கப்படவுள்ள தகவலறிந்து பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்த அவருடைய மகனும் நடிகருமான சிபிராஜ், "இந்தச் செய்தியை அறிந்து உண்மை யிலேயே பெருமைப்படுகிறேன்!" என்று தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
'கட்டப்பா' தோற்றத்தில் மெழுகுச்சிலையாக நிற்கவுள்ள சத்யராஜ். படம்: இணையம்

