மலையேற்றம் சென்ற ஒன்பது பேர் காட்டுத்தீயில் சிக்கி பலி

1 mins read
85010c62-177e-48c2-9c89-69f281f47002
-

தமிழகத்தின் தேனி மாவட்டம், குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றவர்களில் ஒன்பது பேர், அங்கு திடீரென பரவிய காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். ஆண்கள், பெண்கள், குழந் தைகள் உட்பட சென்னையில் இருந்து 24 பேரும் ஈரோட்டில் இருந்து 12 பேரும் இரு குழுக் களாக நேற்று முன்தினம் அந்தக் காட்டுப் பகுதியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டனர். 'சென்னை டிரெக்கிங் கிளப்' எனும் அமைப்பு இந்த மலையேற் றப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்த தாகக் கூறப்பட்டது. கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதி யில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது காட்டுத் தீயில் சிக்கிக்கொண் டனர். இதையறிந்ததும், உள்ளூர் வாசிகளின் துணையுடன் வனத் துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

தீ வேகமாகப் பரவியதால் மலையேற்றம் சென்றவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களை மீட் கும் பணியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலி காப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. ஆயினும், 27 பேரை மட்டுமே பத்திரமாக மீட்க முடிந்தது. தீ விபத்தை பார்த்துப் பதற்றப்பட்டு ஓடியதால் ஒன்பது பேர் பள்ளத் தில் விழுந்து தப்பிக்க முடியாமல் உயிரிழந்தனர்.

காட்டுத்தீயில் சிக்கிய ஒருவரை மீட்டு குரங்கணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்கின்றனர். படம்: டுவிட்டர்