2ஜி குறித்த அனைத்து வழக்குகளையும் ஆறு மாதங்களில் முடிக்க உத்தரவு

1 mins read

புதுடெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் 6 மாதங்ககளில் முடிக்கவேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2ஜி வழக்குத் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவீன் சின்ஹா ஆகியோர் கொண்ட அமர்வு, "2ஜி அலைக்கற்றை வழக்கு நீண்ட காலமாக விசாரணையிலேயே உள்ளது. சிபிஐயும் அமலாக்கத் துறையும் இந்த விஷயத்தில் நாட்டு மக்களை இன்னும் நீண்ட நாட்களுக்கு இருட்டிலேயே வைத்திருக்க முடியாது," என்று கூறினர்.