திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் அடைப்பு

திகார் சிறையில் கார்த்தி சிதம்பரம் அடைப்பு

1 mins read

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கு தொடர்பில் முன் னாள் மத்திய அமைச்சர் சிதம் பரத்தின் மகன் கார்த்தி சிதம் பரத்தை மார்ச் 24ஆம் தேதி வரையில் திகார் சிறையில் அடைப் பதற்கு டெல்லி பாட்டியாலாவில் உள்ள சிபிஐ நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது, மும்பையில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ வழக்கு பதிந்திருந்தது.

இவ்வழக்கில் கடந்த மாதம் 28ஆம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் விசாரணைக்காவல் முடிந்து நேற்று பாட்டியாலா ஹவுஸ் நீதி மன்றத்தில் முன்னிலையானபோது, கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க மறுத்துவிட்டது சிபிஐ நீதிமன்றம். கார்த்தி சிதம்பரத்தை 12 நாட்கள் அதாவது இம்மாதம் 24ஆம் தேதி வரையில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.