ஹைதராபாத்: ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு 'ஐபோன் 6' கைபேசி ஒன்றை பக்தர் காணிக்கையாக வழங்கி உள்ளார். இதைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ள அதிகாரிகள் இதை வைத்து என்ன செய்வது என யோசித்து வருகின்றனர். கிருஷ்ணா மாவட்டத்தில் மோபிதேவி எனும் இடத்தில் சுப் பிரமணிய சுவாமி கோயில் உள் ளது. இக்கோயில் உண்டியலில் 'ஐபோன் 6' கைபேசியை கைபேசிக்கடையின் உரிமையாளர் அன்பளிப்பாக போட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆலய அதிகாரிகள் நன் கொடை செலுத்தப்படும் உண்டி யலை வழக்கம்போல் மூன்று மாதத்திற்கு பின்னர் கடந்த வாரம் திறந்தபோது, அதில் வியக்கும் வகையில் 'ஆப்பிள் ஐபோன் 6எஸ்' பணத்துடன் கிடந்தது. நியூஸ் மினிட் ஊடகத்திற்கு விவரம் தெரிவித்த அதிகாரிகள், "யாரால், எப்பொழுது இது போடப் பட்டது என்று தெரியவில்லை. வழக்கம்போல் மூன்று மாதத்திற்கு பின்னர் உண்டியலைத் திறந்து அதில் சேர்ந்துள்ள நிதியை கணக்கிட முயன்றபோது அதில் புத்தம் புதிதாக 'வாரன்டி' அட்டையுடன் ஐபோன் கைபேசி இருந்தது. அதை தவறுதலாக விழுந்துவிட்டது என்பதைக் காட்டிலும் அதை விருப்பத்துடன் போட்டுள்ளனர் என்பதுதான் உண்மை," என்று கூறினர்.