புதுடெல்லி: ரூ.34,000 கோடி அளவிலான பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) கணக்கு வழக்கில் குழப்பம் நிலவுவதாகவும் வர்த்தகர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை முறைப்படி செலுத்தாமல் வரிஏய்ப்பு செய்தி ருக்கலாம் என்ற புதிய அச்சம் அரசாங்கத்தில் நிலவுவதாகவும் வரி வசூலிக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வரி செலுத்தும் நிறு வனங்கள், அமைப்புகள் ஜூலை, டிசம்பர் மாதத்தில் வருமானம் குறித்த தகவல்களை தாக்கல் செய்யவேண்டும். இதற்காக பல வித படிவங்களும் உள்ளன. அதில் ஜிஎஸ்டிஆர் 1, ஜிஎஸ்டிஆர்- 3பி ஆகியவற்றை மாதாந்திர வரி யாக தாக்கல் செய்யவேண்டும். ஜிஎஸ்டிஆர்-3பி என்ற படிவத்தில் சுருக்கமாக விவரங் களைக் குறிப்பிட வேண்டும்.
ஜிஎஸ்டிஆர் 1ல் முழு விவரங்கள் குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும். இவ்வாறு தாக்கல் செய்யப்படும் இரு வருமானம் குறித்த தகவல் படிவங்களையும் ஒப்பிட்டு வரி விகிதம் சரியாக செய்யப்பட் டுள்ளதா என்று பார்க்கப்படும். இவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்ததில் வரி செலுத்தியதில் சுமார் ரூ.34,000 கோடி அளவுக்கு வித்தியாசம் வருகிறது. அதாவது விற்கப்படும் சரக்கு கள், சேவைகள் தொடர்பான விவ ரங்கள் ஒன்றுக்கொன்று வித்தி யாசப்பட்டுள்ளது. குறிப்பாக, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கைபேசியின் விலையைக் குறிப்பிட்ட தொகையை விட குறைவாக காட்டி இருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு படிவத்திலும் வேறு மாதிரியாக இருக்கிறது. வரியைக் குறைவாக செலுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது.

