ஒரு குறிப்பிட்ட விமான இயந் திரத்துக்கு அனுமதி மறுக்கப் பட்டதைத் தொடர்ந்து இந்தியா வில் இரண்டு தனியார் விமான நிறுவனங்களின் 65 விமானங் களின் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குநரகத்தின் உத் தரவைத் தொடர்ந்து மலிவுக் கட் டண விமான நிறுவனங்களான இண்டிகோ, கோஏர் ஆகியன சில விமானச் சேவைகளை ரத்து செய்தன. 47 இண்டிகோ விமானங்களும் 18 கோஏர் விமானங்களும் நேற்று ஓடவில்லை.
திடீரென்று அவை நிறுத்தப்பட்டதால் அவற் றில் பயணம் செய்ய முன்பதிவு செய்த ஏராளமான பயணிகள் அவதிக்கு ஆளானார்கள். சென்னை, மும்பை, டெல்லி, கோல்கத்தா, ஹைதராபாத், பெங் களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவ னேஸ்வர், அமிர்தசரஸ், கவு காத்தி போன்ற நகரங்களுக்கான இண்டிகோ, கோஏர் விமானங்கள் ரத்து செய்யப்பட்ட விவரம் நேற்றுக் காலையில்தான் வெளி யிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பயணிகள் கூடு தல் தொகை எதுவும் செலுத்தா மல் வேறு விமானத்தில் பயணம் செய்யலாம் அல்லது பயணத்தை ரத்து செய்யலாம் என்றும் ரத்து செய்யப்படுவதற்கு கட்டணம் எது வும் பிடிக்கப்படமாட்டாது என் றும் இண்டிகோ நேற்று தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டது.

