ரஜினி பல பிரச்சினைகளுக்கு வாய்திறக்கவில்லை: கமல்

1 mins read
5a217183-f140-4a79-8739-7313d9d6030d
-

தமிழ்நாட்டில் புதிய அரசியல் பாதை போட ரஜினியும் கமலும் முயன்று வரு கிறார்கள். இருவரிடையே நல்ல நட்பு நில வினாலும் அரசியலில் வெவ்வேறு துரு வங்களாகத் திகழ்ந்து வருகின்றனர். கோவையில் செய்தியாளர்களுக்கு கமல் பேட்டியளித்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப் பது தொடர்பாக ரஜினி பதில் தர மறுக் கிறாரே என்று கேட்கப்பட்டதற்கு, "காவிரி விவகாரம் மட்டுமின்றி பல பிரச்சினை களுக்கு அவர் (ரஜினி) பதில் சொல்வ தில்லை.

எனவே இதை மட்டும் நாம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றார் கமல். இதற்கிடையே, இமய மலை சென்று உள்ள ரஜினி டேராடூனில் செய்தியாளர் களுக்குப் பேட்டியளித்தார். அரசியல் கட்சி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப் பிய வினாக்களுக்குப் பதிலளித்த ரஜினி, ‚"நான் இன்னும் முழுநேர அரசியல்வாதி யாகவில்லை. கட்சிப் பெயரைக்கூட இன் னும் நான் அறிவிக்கவில்லை. எனவே, அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்க விரும்பவில்லை. "ஆன்மிகப் பயணத்திற்காகவே இமயமலை வந்துள்ளேன். இது அரசியல்பயணம் கிடையாது," என்றார்.