கார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணை; நீதிபதி விலகல்

கார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணை; நீதிபதி விலகல்

1 mins read
7c59e994-93af-4852-a00a-bbf26e244e21
-

புதுடெல்லி: முன்னாள் நிதியமைச் சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகியிருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா முறை கேட்டு வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ காவலில் வைத்து விசா ரணை நடத்தி வருகிறது. மேலும் இம்மாதம் 24ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதால் அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த பிணை மனுவை விசாரித்துவந்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி இந்தர் மீத் கவுர் திடீரென்று இந்த வழக்கி லிருந்து விலகியுள்ளார்.

இதனால் பிணை மனு மீதான விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது. பன்னிரண்டு நாள் சிபிஐ காவல் முடிந்து நேற்று முன்தினம் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்ற வாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், "உடல் எடை குறைந்துவிட்டது, அது ஒரு வகையில் நல்லதுதான்," என்றார். "நான் சாப்பிடும் ஆர் வத்தையே இழந்துவிட்டேன். தற்போது குறைவாகத்தான் சாப் பிடுகிறேன். ஆடைகள் தொள தொளவென ஆகிவிட்டன. யாருக்காவது உடல் எடையைக் குறைக்க விரும்பினால் சிபி ஐயை அழைக்கலாம்," என்று சிரித்துக் கொண்டே கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.