ஜெயா பச்சனுக்கு 1,000 கோடி ரூபாய்

ஜெயா பச்சனுக்கு 1,000 கோடி ரூபாய்

2 mins read

சொத்து; இந்தியாவின் பணக்கார எம்பி புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநி லத்தின் எதிர்க்கட்சியான சமாஜ் வாடி கட்சி, மேலவை நாடளுமன்றத் தேர்தலில் 63 வயது நடிகை ஜெயா பச்சனை வேட்பாளராக அறிவித் துள்ளது. இதையடுத்து அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார். இதன்படி ஜெயாபச்சன், அமிதாப்பச்சன் தம்பதியினருக்கு ரூ. 460 கோடி அசையா சொத்து களும் ரூ.650 கோடி அசையும் சொத்துக்களும் உள்ளன. தவிர நொய்டா, போபால், லக்னோ, அஹமதாபாத், காந்தி நகர் போன்ற இடங்களிலும் நிலங்கள் உள்ளன.

அமிதாப் பச்சனுக்கு 36 கோடி ரூபாய் நகைகளும் ஜெயா பச் சனுக்கு 26 கோடி ரூபாய் நகை களும் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இருவருக்கும் ரூ. 13 கோடி மதிப்பில் தலா 12 வாகனங்களும் இருக்கின்றன. மேலும் ஜெயா பச்சனுக்கு லக்னோவில் 1.22 ஹெக்டெரில் விவசாய நிலங்கள் உள்ளன. இவற்றின் மதிப்பு ரூ. 2.2 கோடி. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் ஜெயா பச்சனின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என்று வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2014ஆம் ஆண்டின் மேலவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த ரவீந்திரா கிஷோர் சின்கா என்பவர் வேட்பு மனு செய்தபோது அவரது சொத்து மதிப்பு ரூ.800 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சாதனையை ஜெயா பச்சன் முறியடித்துள்ளார். இதனால் மிகவும் பணக்கார மேலவை எம்பி என்ற பெரு மையை ஜெயா பச்சன் பெறு கிறார். இதற்கிடையே மேலவை உறுப்பினர் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என்று நினைத்த மூத்த தலைவர் நரேஷ் அகர் வால் விரக்தியடைந்து பாரதிய ஜனதாவிற்குத் தாவியுள் ளார்.