தெலுங்கானா சட்டமன்றத்தில் 11 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

தெலுங்கானா சட்டமன்றத்தில் 11 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

1 mins read

ஹைதராபாத்: தெலுங்கானா சட்டமன்றத்தில் நேற்று முன் தினம் வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடரின்போது ஆளுநர் உரையாற்றினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று மீண்டும் சட்டமன்றம் கூடியபோது அமளியில் ஈடுபட்ட அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சபாநாயகர் மதுசூதன் அறிவித்தார். இதன்மூலம் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 6 சட்டமேலவை உறுப்பினர்கள் ஆகியோர் வரவுசெலவுத் திட்டக் கூட்டத் தொடர் முழுவதிலும் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.