புதுக்கொடிகள் முளைப்பது வழக்கம்: கமல், ரஜினி குறித்து ஸ்டாலின்

புதுக்கொடிகள் முளைப்பது வழக்கம்: கமல், ரஜினி குறித்து ஸ்டாலின்

1 mins read
4b675d00-7a32-4eb4-9b31-37780842a12b
-

சென்னை: அரசியல் களத்தில் புதுப்புதுக் கொடிகள் முளைப்பது ஜனநாயக வழக்கம்தான் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நடிகர்கள் ரஜினி, கமல் இருவரும் அரசியல் பிரவேசம் செய்துள்ளனர். மறுபக்கம் டிடிவி தினகரன் புதுக் கட்சி தொடங்குகிறார். இவர்களை மறைமுகமாகக் குறிப்பிட்டே ஸ்டாலின் இவ்வாறு கூறியதாகக் கருதப்படுகிறது. "ஈரோட்டில் எதிர்வரும் 24, 25ஆம் தேதிகளில் நடைபெறும் திமுக மாநாட்டுக்கு தொண்டர்கள் திரளாக வரவேண்டும். மாநாட்டில் இரு தினங்களில் 50 தலைப்புகளில் திமுக சொற்பொழிவாளர்கள் கருத்து மழை பொழிவர்," என ஸ்டாலின் மேலும் கூறியுள்ளார்.