குமரி கடற்பகுதியில் புயல் சின்னம்: கனமழை பெய்யும்

குமரி கடற்பகுதியில் புயல் சின்னம்: கனமழை பெய்யும்

1 mins read

சென்னை: புயல் சின்னம் காரண மாக கன்னியாகுமரி, கேரளாவின் தென்பகுதி மற்றும் மாலத்தீவுக ளில் மிதமானது முதல் கனமா னது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, புயல் சின்னம் நகரும் பகுதிகளை ஒட்டியுள்ள துறை முகங்கள் மற்றும் கடலோர பகுதி களில் உள்ளவர்கள் முன்னெச்ச ரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலில் தற் போது வலுவான புயல் சின்னம் உருவாகி உள்ளது.

இதையடுத்து மன்னார் வளைகுடா முதல் லட்சத்தீவுகள் வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக் கப்பட்டு உள்ளது. இந்திய பெருங்கடலில் கும ரிக்கு தெற்கே உருவான காற்ற ழுத்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, குமரி பகுதியில் புயல் சின்னமாக சுழல்வதாக வானிலை ஆய்வு மைய இயக்கு நர் பாலசந்திரன் கூறினார். "அடுத்து வரும் இரு தினங் களுக்கு குமரி கடலோரம், கடல் அலை கொந்தளிப்பாக காணப் படும். மணிக்கு 60 கிலோ மீட் டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்," என்றார் பாலசந்திரன்.