இந்தியாவின் தென்கோடி மாநில மான தமிழ்நாட்டில் புதிய பாணி கொள்ளைக்காரர்கள் தலைதூக்கி வருவதாக போலிஸ் தெரிவித்து இருக்கிறது. அந்தக் குண்டர் கும்பல் ஒரு வாகனத்தில் வலம்வருவதாகவும் திடீர் திடீரென்று கத்தியைக் காட்டி சாலைகளில் பலரையும் மிரட்டி கொள்ளையடிப்பதாகவும் போலிஸ் விளக்கியது. சென்னையின் பல பகுதிகளி லும் திருச்சியிலும் கடந்த ஒரு சில வாரங்களில் இத்தகைய கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந் திருப்பதாக போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்ளைக்கும்பல் பயன்படுத் தும் TN18S9046 என்ற எண் உள்ள வாகனம் திருட்டு வாகனம் என்று போலிஸ் தெரிவித்தது. அது திருவள்ளூர் மாவட்டத்தில் கரவாபேட்டை என்ற ஊரிலிருந்து திருடப்பட்டது. அந்த வாகனத்தை வைத்துக் கொண்டு நெமிலிச்சேரி, திரு நன்றியூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் திருச்சி நகரைச் சுற்றியுள்ள இடங்களிலும் கொள் ளைக்கூட்டத்தினர் கைவரிசை காட்டி இருக்கின்றனர்.
திருச்சி அருகே கட்டுமானத் துறை ஊழியர்களை மிரட்டி கைத் தொலைபேசிகளையும் விலை உயர்ந்த பொருட்களையும் கொள் ளைக்காரர்கள் பறித்துச் சென்று விட்டனர். இதனிடையே, அந்தக் கொள் ளைக்கூட்டத்தினரை மடக்கிப் பிடிக்க போலிஸ் மும்முரமாக வேட்டையைத் தொடங்கி இருக் கிறது. இதைத் தெரிந்துகொண்ட கொள்ளைக்கும்பல், ஸ்ரீபெரும் புதூர் அருகே வாகனத்தைக் கைவிட்டுவிட்டு ஓடிவிட்டதாக போலிஸ் தெரிவித்தது. 'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற தமிழ்த் திரைப்படத்தில் வரும் கொள்ளைக்கூட்டத்தைப் போல இந்தக் குண்டர்கள் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். பல ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் நடந்த உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து 'தீரன்' திரைப்படம் எடுக்கப் பட்டது.

