சமூக இணையத்தளமான டுவிட்ட ரில் அதிக போலி ரசிகர்களைக் கொண்ட தலைவர்களில் இந்திய அரசியல்வாதிகள் முதலிடங் களைப் பிடித்து இருக்கிறார்கள். இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை டுவிட் டரில் பின்பற்றும் 6.15 மில்லியன் பேரில் 69% போலியானவர்கள் என்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்து இருக்கிறது. இந்த ஆய்வை 'டுவிப்ளமேசி' என்ற இணையத்தளம் நடத்தியது. இந்த இணையத்தளம் அனைத் துலக நிறுவனங்களும் அரசாங் கங்களும் தங்களுடைய மின் னிலக்க உத்திகளை மேம்படுத்த உதவிவரும் ஒரு மின்னிலக்கத் தளமாகும். டுவிட்டரில் போலியான ரசிகர் களை அதிக விழுக்காட்டில் கொண்டுள்ள அரசியல்வாதிகளில் பாஜக தலைவர் அமித் ஷா இரண் டாவது இடத்தைப் பெறுகிறார் (67%). டுவிட்டரில் சசி தரூரைப் பின்பற்றும் 6.55 மில்லியன் பேரில் 62% போலியானவர்கள். 61% போலி ரசிகர்களுடன் பிரதமர் மோடி, 13.5 மில்லியன் பேரில் 51% போலி ரசிகர்களுடன் அர விந்த் கெஜ்ரிவால் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறார்கள்.
மோடி, ராகுல் காந்திக்கு அதிக போலி ரசிகர்கள்
1 mins read

