இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி மாற்று அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தில் காங் கிரஸ் கட்சி 'விருந்து உத்தியைத்' தொடங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. புதுடெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை அளித்த விருந்தில் 20 எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டன. பாஜகவுக்கு எதிராக பெரும் கூட்டணியை அமைத்து தேர்த லைச் சந்திக்கும் உத்தியில் உருப் படியான முதல் முயற்சி இது என்று வர்ணிக்கப்படுகிறது. சோனியாவின் விருந்தில் 20 எதிர்க்கட்சிகள் கலந்துகொண் டன. அவற்றுடன், ஜார்க்கண்ட், பீகார் ஆகிய மாநில தலைவர்களும் சரத் யாதவும் விருந்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் திமுக உட்பட பல தரப்பினரும் விருந்தில் மிகவும் நாட்டத்துடன் கலந்துகொண்ட தாகத் தகவல்கள் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல் முத லான தலைவர்கள் இதர எதிர்க் கட்சித் தலைவர்களுடன் மனம் திறந்து பேசினர் என்று கட்சி வட்டாரங்கள் கூறின. "இந்த இரவு விருந்து பலதரப் பட்ட அரசியல் கட்சியினரும் சந் தித்து தங்களுக்குள் பிணைப்பை வலுப்படுத்திக்கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பாக இருந்தது.
சோனியா காந்தி அளித்த விருந்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் (வலது) திமுக நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி. படம் இந்திய: ஊடகம்

