பேரறிவாளன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

பேரறிவாளன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

1 mins read

புதுடெல்லி: கடந்த 1999ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் அளித்த தீர்ப்பில் எந்தவிதமான தலையீடும் செய்யத் தேவையில்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இவ்வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக சிபிஐ தரப்பில் பன்முக ஒழுங்கு காண்காணிப்பு அமைப்பு பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில் பேரறிவாளனை விடுவிக்கவோ தண்டனையை நிறுத்தி வைக்கவோ கூடாது என எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.