சென்னை: காவிரி விவகாரம் தொடர்பில் சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் விடுத்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அண் மையில் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தர வில் குறிப்பிட்டிருந்தது.
மேலாண்மை வாரியம் அமைப் பது தொடர்பில் உச்ச நீதிமன்றம் இதுவரை எந்த உறுதிமொழியும் அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் 22ஆம் தேதி தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அப்போது உச்ச நீதி மன்ற தீர்ப்பு தொடர்பாக அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவ டிக்கை குறித்து விவாதிக்கப் பட்டது. கூட்டத்தின் முடிவில் தமிழகத் தின் அனைத்துக்கட்சி பிரதிநிதி கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது எனத் தீர்மானிக்கப்பட் டது.
எனினும் பிரதமர் அலுவலகம் இதுவரை இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் தமிழக எதிர்க்கட்சி கள் கடும் அதிருப்தியில் உள் ளன. இதையடுத்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி காவிரி விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரிடம் வலி யுறுத்தினார். எதிர்க்கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

