நூற்றாண்டு காலத் தமிழர்களின் தியாக வரலாற்றின் அடையாளச் சின்னமான மூலக்கொத்தளம் மயானத்தை அகற்றுவதைக் கண்டித்து சென்னையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ தலைமை தாங்கினார். கி.வீரமணி, முத்தரசன், தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். "தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் விடியலுக்காகவும், செந்தமிழ் மொழியின் தனித்தன்மையை, உரிமையை பாதுகாக்கவும், சமூக நீதியை காக்கவும், சமதர்ம சமுதாயம் காணவும் போராடிய மாவீரர்களின் உடல்கள் இந்த மூலக்கொத்தளம் மயானத்தில்தான் எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வந்துள்ளன," என்று வைகோ சுட்டிக் காட்டினார். படம்: தகவல் ஊடகம்
மயானத்தை அகற்ற எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்
1 mins read
-

