கரை ஒதுங்கும் டால்ஃபின்கள்: கவலையில் சீர்காழி மீனவர்கள்

1 mins read
5d6bf6a2-193f-4564-a3b9-bc8ccc63e7d8
-

சீர்காழி: டால்ஃபின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதால் சீர்காழி கடற்பகுதியில் பரபரப்பும் கவலையும் நிலவுகிறது. 25க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் இறந்து கரை ஒதுங்கி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே நாகை மாவட்ட கடற்பகுதியில் டால்பின்கள், ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை. எனினும் கடலோர மீனவக் கிராமங்களில் வசிப்பவர்கள் மத்தியில் இது கவலையை ஏற் படுத்தி உள்ளது.

தடை செய்யப்பட்ட வலை களைப் பயன்படுத்துவது, கப்பல் கள் மோதுவது, எண்ணெய்க் கசிவு போன்ற காரணங்களால் கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தொடுவாய் மீனவ கிராமம் அமைந்துள்ள கடற்பகுதி அருகே கடந்த இரு தினங்களில் மட்டுமே 25 டால்ஃ பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. "சுமார் ஒரு கிலோ மீட்டர் பரப்பளவில் டால்ஃபின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. இதனால், இப்பகுதியில் துர்நாற் றம் வீசுகிறது.

இறந்து கரை ஒதுங்கிய டால்ஃபின்கள். படம்: தகவல் ஊடகம்