4.1 மி. வங்கிக் கணக்குகள் ரத்து

4.1 மி. வங்கிக் கணக்குகள் ரத்து

1 mins read

புதுடெல்லி: 'மினிமம் பேலன்ஸ்' எனப்படும் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காத 4.1 மில்லி யன் (41.16 லட்சம்) வங்கிக் கணக்குகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ரத்து செய்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் காட் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மனுச் செய்தார்.

அதில், "சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் முறை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொண்டு வரப் பட்டது. அப்போது முதல் கடந்த ஜனவரி வரை எத்தனை சேமிப்பு கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று கேட்டு இருந்தார். அதற்கு எஸ்பிஐ தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "நாடு முழுவதும் கடந்த 2017 ஏப்ரல் முதல் 2018 ஜனவரி வரை குறைந்த அளவு இருப்பு பராமரிக்காத 41.16 லட்சம் சேமிப்புக் கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் 40 கோடி வாடிக்கை யாளர்கள் கணக்கு வைத்துள்ள னர். இதில் 16 கோடி வாடிக்கை யாளர்கள் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டத்தின்கீழ் கணக்கு தொடங்கியவர்கள்.