பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுதலை

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுதலை

1 mins read
190ae7b6-a732-4ea7-b387-2479fcc36cfc
-

சென்னை: பிஎஸ் என்எல் முறைகேடு வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள் ளது. பிஎஸ்என்எல் சட்டவிரோத தொலை பேசி இணைப்புகள் தொடர்பான வழக்கி லிருந்து விடுவிக்கக்கோரி கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் மாறன் சகோதரர்கள் தரப்பில் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி நடராஜன் இதற்கான தீர்ப்பு மார்ச் 14ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, நேற்று பிற்பகலில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச் சராக இருந்தபோது தமது சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பிஎஸ்என்எல் அதிவிரைவு தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் மூலம் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட தாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது.