சென்னை: தமிழக அரசுக்கு வரு வாய் 1.76 லட்சம் கோடி ரூபாய் என்றும் செலவு 1.93 லட்சம் கோடி ரூபாய் என்றும் தமிழக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ. பன் னீர்செல்வம் தெரிவித்தார். இதனால் வருவாய் பற்றாக் குறை ரூ.17,490 கோடியாக இருக் கும். 2018-19ல் தமிழகத்தின் பொருளியல் வளர்ச்சி 9 விழுக் காடாக இருக்கும். மானியம் உதவித் தொகைக்கு ரூ. 75,723 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சி நிதியத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு, காவல்துறைக்கு ரூ.7,877 கோடி நிதி ஒதுக்கீடு, மத்திய வரிகளில் தமிழகத்திற்கான பங்கு ரூ.31,707 கோடியாக இருக் கும்.
"ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்களுக்கு ரூ.25,362 கோடி, சம்பள செலவினங்களுக்கு ரூ.52,171 கோடி, தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறைக்கு ரூ.347.59 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். "ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழ கத்திற்கு நல்ல பலன் கிடைத் துள்ளது. சென்னை விரிவாக்க பகுதிகளில் ரூ.614.84 கோடியில் பாதாள சாக்கடை திட்டம், கதர் துறைக்கு ரூ.227 கோடி ஒதுக்கீடு, தொழில்களுக்குப் புதிய சலு கைகள் உட்பட முக்கியமான 10 பிரச்சினைகளை மையப்படுத்தி வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப் பட்டது," என்றார் திரு பன்னீர் செல்வம். பின்னர் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் 3.55 லட்சம் கோடி கடன் சுமை பற்றி பேசிய நிதி செயலாளர், "நிதிச்சுமையும் கடன் பற்றாக்குறையும் கட்டுக் குள் உள்ளன," என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனி சாமியுடன் பன்னீர்செல்வம். படம்: இந்திய ஊடகம்

