தினகரனின் புதிய கட்சிக்கு பெயர், கொடி அறிமுகம்

தினகரனின் புதிய கட்சிக்கு பெயர், கொடி அறிமுகம்

1 mins read
4bda8780-4a0a-495b-8f5f-aa6f989a6fa4
-

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள எஸ்.பி.ஆர். மைதானத்தில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று காலை தமது கட்சிக் கொடியையும் கட்சிப் பெயரையும் டிடிவி தினகரன் அறிமுகம் செய்தார். காலை 9.30 மணியளவில் தொடங்கிய நிகழ்ச்சியில் பேசிய அவர், தமது கட்சியின் பெயரை 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியை அவர் அறிமுகம் செய்தார். அதில் மேலிருந்து கீழாக கறுப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களைக் கொண்ட கொடியின் மத்தியில் அமரர் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய தினகரன், நீதிமன்றத்தில் முறையிட்டு இரட்டை இலைச் சின்னத்தைப் பெற முயற்சி செய்யப்போவதாகக் குறிப்பிட்டார்.

108 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியேற்றினார் டிடிவி தினகரன். படம்: தமிழக ஊடகம்