சென்னை: அண்மையில் ஏர்செல் சேவை முற்றிலும் முடங்கியதால் அதன் வாடிக் கையாளர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து ஏர்செல் நிறுவனமே வாடிக்கையாளர் களை வேறு நெட்வொர்க்கிற்கு மாறிக்கொள்ளும்படி கூறி யது. அவ்வாறு மாறியவர் களில் அதிகப்படியானோர் தேர்வு செய்தது ஏர்டெல் மற்றும் வோடஃபோனைத் தான். ஆனால் ஏர்டெல் சேவை நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அவதிப் பட்டு வந்த நிலையில் நேற்று வோடஃபோன் வாடிக்கை யாளர்களும் பாதிக்கப் பட்ட னர். பல இடங்களில் வோடஃபோன் சிம்மிலிருந்து மற்றவர்களுக்குத் தொடர்பு கொள்ள முடியவில்லை. நெட் வொர்க் சரியாகக் கிடைக் காமல் மக்கள் அவதிப்படுவ தாகத் தெரிவிக்கப்பட்டது.
வோடஃபோன், ஏர்டெல் சேவைகள் பாதிப்பால் அவதி
1 mins read
-

