நாமக்கல்: பெரியார், அண்ணா, எம்ஜிஆர் சிலைகள் நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ளன. இந்த மூன்று சிலைகளும் அதிமுக சார்பில் வைக்கப்பட்டு பராமரிக் கப்பட்டு வருகின்றன. அந்தச் சிலைகளுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் சிலர் திடீரென காவி நிறத் துணியைப் போர்த்தியதோடு மாலை அணி வித்துச் சென்றுவிட்டனர். அண்மையில், பெரியார் சிலை குறித்து பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஃபேஸ்புக்கில் பதிவு செய்தது அதிர்வலைகளை ஏற் படுத்தி இருந்தது. அதைக் கண் டித்து தமிழகம் முழுவதும் பல் வேறு இடங்களில் எச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
இந்த நிலையில் பெரியார், அண்ணா மற்றும் எம்ஜிஆர் சிலைகளுக்கு காவி நிறத் துணி போர்த்தப்பட்ட சம்பவம் நாமக் கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லில் பெரியார் சிலைக்குக் காவி நிறத் துணி போர்த்தப்பட்டது மனவேதனை அளிப்பதாக மக்கள் உரிமைக் கழகத்தினர் தெரிவித்தனர். மேலும், இத்தகைய செயல் களில் ஈடுபடுவோர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே தகவல் அறிந்து விரைந்து வந்த நாமக்கல் போலிசார் சிலைகளில் இருந்த காவி நிறத் துணிகளை அகற்றினர். இதற்கிடையே, எச்.ராஜாவை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யக் கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்துவிட்டது.
மர்மமான முறையில் காவித் துணி போர்த்தப் பட்ட அண்ணா, எம்ஜிஆர், பெரியார் சிலைகள். படம்: தமிழக ஊடகம்

