தருமபுரி: காப்புறுதி (இன்சூரன்ஸ்) பணத்திற்காக கணவனைக் கொன்ற பெண் கைதானார். தருமபுரி மாவட்டம் காரிமங் கலத்தை அடுத்த பெரியாம்பட்டி பகுதியைச் சோந்த மாதேஷ் (45). என்பவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். மூன்று வாரங்களுக்கு முன் காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள தீக்குண்டு என்ற இடத்தில் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் மாதேஷ் சடலமாக மீட்கப்பட்டார். அந்த சடலம் தருமபுரி அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
மாதேஷ் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காரிமங்கலம் போலி சார் சந்தேகப் பார்வையை மாதே ஷின் மனைவி ரேவதி மீது திருப்பி விசாரணை செய்தனர். அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்கவே ரேவதியிடம் நடத்தப்பட்ட விசா ரணை தீவிரமடைந்தது. பின்னர் உண்மையை ஒப்புக்கொடு வாக்கு மூலம் அளித்தார் ரேவதி. "எனக்கும் பென்னாகரத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக் கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துவந்தது. எங்கள் தொடர் புக்கு கணவர் மாதேஷ் இடை யூறாக இருந்துவந்தார். "மேலும், கணவரின் பெயரில் ரூ.55 லட்சம் மதிப்பில் இன்சூ ரன்ஸ் இருந்தது.
அவர் இறந்து விட்டால் மொத்தப் பணமும் எனக்குக் கிடைத்துவிடும். அதன் பிறகு நாம் இருவரும் ஜாலியாக இருக்கலாம் என்று ஜெயபிரகாஷ் திட்டம் போட்டுக் கூறினார். "அதன்படி ஜெயபிரகாஷ், அவரது தம்பி வெங்கடேஷ், விக்னேஷ் மற்றும் எனது மகன் யோகேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து சிமெண்ட் குடோனுக்கு கணவர் மாதேஷை காரில் அழைத்துச் சென்றோம். பின்னர் அவரை அடித்து, ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டுக் கொலை செய்தோம். "பிறகு, சாலையோரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதுபோல செட்டப் செய்தோம். ஆனால், போலிசார் கண்டுபிடித்துவிட்ட னர்," என்று ரேவதி வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்தக் கொலை தொடர்பாக, மேலும் 4 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர்.
கொல்லப்பட்ட மாதேஷும் கைதான அவரது மனைவி ரேவதியும். படம்: தமிழக ஊடகம்

