சென்னை: சென்னையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போலிசார் வெயிலால் கடுமையாகப் பாதிக்கப்படு வது வழக்கம். இதனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தினமும் இரு முறை மோர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் மெரினாவில் நேற்று மோர் வழங்கல் நடவடிக்கையைத் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகரில் மட்டும் 2,500 போக்குவரத்து போலிசார் பணியில் உள்ளனர். அவர்களுக்கு காலை, மாலை இரு வேளை யும் 5 ஆயிரம் ஆவின் மோர் பாக்கெட்டுகள் வினியோகிக்கப் பட உள்ளன.
தினமும் ஐயாயிரம் மோர் பாக்கெட்டுகள் இலவசமாகத் தரும் திட்டம் நேற்று தொடங்கியது. படம்: தமிழக ஊடகம்

