திரையரங்குகள் மூடல்; படப்பிடிப்பு நிறுத்தம்

1 mins read
ec7d9692-e560-4edf-a6c5-a38aba1d9b95
-

சென்னை: கேளிக்கை வரி உள் ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சென்னையில் நடந்த திரை யரங்கு உரிமையாளர்கள் கூட்டத் தில் கேளிக்கை வரி, ஜிஎஸ்டி உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரி வித்து வேலைநிறுத்தப் போராட்டத் தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் திரையரங்கு உரிமையாளர்கள் நேற்று காலவரையற்ற வேலைநிறுத் தத்தைத் தொடங்கினர்.

தமிழ்நாட்டில் மொத்தம் 1,100 திரையரங்குகள் உள்ளன. தற் போது அனைத்து திரையரங்குகளி லும் 'டிஜிட்டல்' முறையில் படங் கள் திரையிடப்படுகின்றன. தனி யார் நிறுவனங்கள் செய்துவரும் இச்சேவைக்கான கட்டணத்தை படத் தயாரிப்பாளர்களே கொடுத்து வருகிறார்கள். அதிகமாக உள்ள இக்கடணத்தையும். விளம்பர கட் டணத்தையும் 'டிஜிட்டல்' சேவை நிறுவனங்களே பெற்றுக்கொள் கின்றன. இதனால் தயாரிப்பாளர்கள் தங் கள் படங்களைத் திரையிட லட்சக் கணக்கான ரூபாய் செலவு செய் யும் நிலை உள்ளது.