ஐந்தாண்டு கட்டாய ராணுவ சேவையாற்றினால் மட்டுமே இனி இந்தியாவில் அரசாங்க வேலை கிடைக்கலாம்

ஐந்தாண்டு கட்டாய ராணுவ சேவையாற்றினால் மட்டுமே இனி இந்தியாவில் அரசாங்க வேலை கிடைக்கலாம்

1 mins read

இந்தியாவில் இனிமேல் மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர விரும்புவோர் ஐந்தாண்டு ராணுவ சேவையாற்றுவதை கட்டாயமாக்கவேண்டும் என்று நாடாளு மன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்திய ராணுவத்தில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், 'கெஸட்டட் ஆஃபிசர்ஸ்' என்ற மேல்நிலை அரசுப் பணிகளில் நேரடியாகச் சேர விரும்பு வோர் ஐந்தாண்டு கட்டாய ராணுவ சேவையாற்றுவதன் மூலம் அந்தப் பற் றாக்குறையை ஈடுகட்ட முடியும் என்று நிலைக்குழு தெரிவித்துள்ளது.

நிலைக்குழுவின் பரிந்துரை அடங் கிய அறிக்கை கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசில் அதிகாரி பணியில் சேர விரும்புவோர் ராணுவத்தில் ஐந்தாண்டு சேவையாற்றி இருக்கவேண்டும் என் பதைக் கட்டாயமாக்கும்படி தற்காப்பு அமைச்சும் மத்திய பணியாளர், பயிற்சித் துறைக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. மத்திய பணியாளர், பயிற்சித் துறை யின் பதிலுக்காகக் காத்திருப்பதாகக் கூறியுள்ள நிலைக்குழு, இந்த விவகா ரத்தைத் தற்காப்பு அமைச்சு தீவிரமாகக் கருதி, அக்கறை காட்டவில்லை என்றும் சாடியிருக்கிறது. "அதிகாரி, கீழ்நிலைப் பணிகளில் பெரும் ஆள் பற்றாக்குறை நிலவுவது உண்மை. அது சரிசெய்யப்பட வேண்டும். இருப்பினும், அதிகாரி நிலைகளில் உள்ள பற்றாக்குறையைப் போக்க முன் னுரிமை அளிக்கப்படவேண்டும் என்று நிலைக்குழு விரும்புகிறது," என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ராணுவத்தில் 7,679 அதிகாரிகள் உட்பட 27,864 பேர் குறைவாக இருப்ப தாகக் கூறப்படுகிறது.