புதுடெல்லி: இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்தின் டுவிட்டர் பக்கத்தில் முதன்முறையாக தமிழ் இடம்பெற்றுள்ளது. மடகாஸ்கர் சென்றுள்ள திரு கோவிந்த், அங்குள்ள இந்திய சமூகத்தினரிடம் உரையாற்றினார். "இந்தியா தனது புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது சாதனைகள் குறித்துப் பெருமிதம் கொள்கிறது. அவர்கள் இந்தியாவின் உண்மையான தூதர்களாகவும் நமது பெரிய நாட்டின் நிர்மாணத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்," எனத் தமிழில் அவரது உரை டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதிபரின் டுவிட்டரில் தமிழ்
1 mins read

