625,000 சிறாருக்கு புகைப்பழக்கம்

625,000 சிறாருக்கு புகைப்பழக்கம்

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் 625,000 சிறாருக்குப் புகைப்பழக்கம் உள்ளது என்றும் அவர்களில் 195,000 பேர் சிறுமிகள் என்றும் அமெரிக்கப் புற்றுநோய்க் கழகத்தின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. புகைப்பதால் ஏற்படும் நோய் பாதிப்புகளால் இந்தியாவில் சராசரியாக ஒரு வாரத்திற்கு 17,887 பேர் இறப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியர்கள் புகைப்பதற்காக நாள்தோறும் இரண்டு கோடி ரூபாய் செலவு செய்கிறார்களாம். ஒட்டுமொத்தமாக, 1.34 கோடி பெண்கள் உட்பட 17.1 கோடி இந்தியர்களுக்குப் புகைப்பழக்கம் இருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.