புதுடெல்லி: தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தூக்கி எறிந்துவிட்டு வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இம்மாநாடு மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. அடுத்த ஆண்டில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு எப்படி ஆயத் தமாவது, கட்சியை வளர்ப்பது ஆகியவையே இந்த மாநாட்டின் நோக்கம்.
மாநாட்டில், "தேர்தல் நடைமுறை களின் நம்பகத்தன்மையை உறுதிப் படுத்த, மற்ற பெரிய ஜனநாயக நாடுகளில் உள்ளதுபோல் தேர்தல் ஆணையம் வாக்குச்சீட்டு என்ற பழைய முறைக்கே திரும்பவேண் டும்," என்று தீர்மானம் இயற்றப் பட்டது. மின்னணு வாக்குப்பதிவு இயந் திரங்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டு வருவதாக பல அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கூறி வரும் நிலையில், இப்போது காங் கிரஸ் கட்சியும் அதே புகாரை எழுப்பியுள்ளது. மாநாட்டில் பேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, "பாஜகவின் அராஜக அரசியலுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட் டோம்," என்று முழங்கினார்.

