காவிரி மேலாண்மை வாரியம் இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் அமைக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்த ரராஜன் தெரிவித்து இருக்கிறார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தம் கட்சி நிச்சயம் நிறைவேற்றும் என் றும் இந்த மாத இறுதிக்குள் அந்த வாரியம் அமைக்கப்படும் என்றும் நேற்று செய்தியாளர்களி டம் அவர் தெரிவித்தார். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத் தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இந்தத் தீர்ப்பை அடுத்து இதன் தொடர்பில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பேராளர் கூட்டம் கடந்த மாதம் 22ஆம் தேதி தமிழ் நாட்டில் நடந்தது. தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பேராளர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்திக்க வேண்டும் என்று அந்தக் கூட் டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டபோது, முதலில் மத்திய நீர் வளத்துறை அமைச் சரைச் சந்திக்கும்படி பிரதமர் அலுவலகம் கூறியது.
இந்த நிலையில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த பேராளர்கள் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் மத்திய அர சுடன் பேசினர். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கவேண் டும் என்று தமிழக அரசு சார்பாக அவர்கள் அப்போது திட்டவட்ட மாக வலியுறுத்தினர்.
தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன். கோப்புப்படம்

