சென்னை: திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சசிகலாவின் கணவர் ம.நடராஜன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது என சிகிச் சைக்காக அவர் அனுமதிக்கப் பட்டுள்ள தனியார் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. கடந்தாண்டு சிறுநீரகம், கல்லீரல் கோளாறுகள் காரண மாக நடராஜனின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற் கொண்டால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க இயலும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தேறியது. அதன் பிறகு மிக விரைவாக இயல்பு வாழ்க் கைக்குத் திரும்பினார் நடராஜன். இந்நிலையில் அவரது உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டதால் அவர் சென்னையில் உள்ள தனி யார் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. கடந்த சில தினங்களாகவே அவர் உடல்நலம் குன்றியிருந்த தாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தனது கணவரைக் காண சசிகலா மீண்டும் பரோலில் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

