போராட்டங்கள் வலுக்கின்றன: சீமான் புகார்

போராட்டங்கள் வலுக்கின்றன: சீமான் புகார்

1 mins read
169b5309-188a-437a-b2c1-d2fa3b1bee1b
-

தூத்துக்குடி: தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா என்பதே சந்தேகமாக உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராடும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே அரசு அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக அவர் சாடினார். தமிழகம் தற்போது தலைவன் இல்லா நாடாகவும், தகப்பன் இல்லா வீடாகவும் உள்ளதாக விமர்சித்த அவர், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

"மண் அள்ளுதல், கிரானைட் குவாரியை ஊக்குவித்தல், மீத்தேன் எடுப்பது போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்கள் குறித்து போராட்டத்தின் மூலம் மக்கள் குரல் எழுப்பும்போது அவர்களை தீவிரவாதிகள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என பட்டம் கட்டுவார்கள். "35 நாட்களாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடி வரும் மக்களை அரசு சார்பில் யாராவது சந்தித்தார்களா? "இந்தப் போராட்டம் மட்டு மல்ல தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுக்கின்றன. போராடுகின்ற மக்களை அரசு கண்டுகொள்ளவில்லை," என்று சீமான் மேலும் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.