சென்னை: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் போன்ற சூழலில், இசைதான் அனைவருக்கும் மிகவும் தேவைப்படுகின்ற இயற்கையான மருந்து என துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். மறைந்த பிரபல கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். "கலாசாரமும் தாய்மொழியும் ஒருசேர பயணம் செய்பவை. தாய்மொழி கண் போன்றது. பிற மொழி கண்ணாடி போன்றது. கண்ணாடியால் பார்ப்பதை விடவும், கண்ணால் தெளிவாக பார்க்க முடியும். எனவே தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கு தாய்மொழியில் பேச கற்றுக்கொடுக்க வேண்டும்," என்றார் துணை அதிபர்.
தாய்மொழிக்கு முக்கியத்துவம் தர வெங்கையா வலியுறுத்து
1 mins read
-

