அரியலூர்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடைய உண்மை முகம் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்று இலட்சிய திமுக கட்சித் தலைவர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். அரியலூரில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழக மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என்றும், அது நிறைவேற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசுக்கும் ஸ்டாலினுக்கும் இடையே ரகசிய உடன்பாடு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இரு தரப்பினரும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக தமிழக மக்களைப் பகடைக் காயாக மாற்றுகிறார்கள் என்று சாடினார்.
"தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களால் டெல்டா பகுதிகள் அனைத்தும் பாலைவனமாகும் நிலை ஏற்படும். மத்திய அரசு தமிழகத்திற்கு எதிரான பல விஷயங்களில் ஈடுபடுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. "இந்தத் திட்டங்களை மாநில அரசு அனுமதிக்கக்கூடாது. ஸ்டா லினுக்கும் ஆளுங்கட்சியினருக் கும் ரகசிய உடன்பாடு உள்ளது. இதனால்தான் ஸ்டாலின் கல் லூரிக்குச் செல்வது போல் சட்டப் பேரவைக்குச் சென்றுவிட்டு உடனே வெளியே வருகிறார்," என்றார் டி.ராஜேந்தர்.
தமக்கு கருணாநிதிதான் எப்போதும் தலைவர் என்று குறிப் பிட்ட அவர், கருணாநிதி அழைத் தால் தனது கட்சியை தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க தயாராக இருந்ததாகக் கூறினார். ஆனால் தற்போது அம்முடிவை மாற்றிக்கொண்டதாகவும் இனி தாமே கட்சியை நடத்துவது என முடிவு செய்துவிட்டதாகவும் ராஜேந்தர் தெரிவித்தார்.
டி.ராஜேந்தர். படம்: இணையம்

