அழகிய தமிழ்மொழியை அகற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அழகிய தமிழ்மொழியை அகற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

2 mins read
cc8718b9-d796-4b9e-9f70-dc5d8f8d79aa
-

சென்னை: தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை மாற்ற பாரதிய ஜனதா முயற்சி செய்வ தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். டெல்லியில் நடைபெற்ற காங் கிரஸ் கட்சியின் மாநாட்டில் பேசிய அவர், தமிழர்களிடம் மத் திய அரசு வேறுமொழியைத் திணிக்க முயல்வதாகவும் அவர் சாடினார். ராகுலின் இந்தப் பகிரங்க குற்றச்சாட்டு அரசியல் களத்தி லும் தமிழகத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக அதிகார வேட்கையுடன் இருப்பது மக்களுக்குத் தெரிந்து விட்டது என்றும் உண்மை பேசுவதில் இருந்து காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் தடுத்து விட முடியாது என்றும் ராகுல் தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழகத்தில் சமசுகிருதத்தைத் திணிக்க முயல்வதாக சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், தமிழ் மொழியை அகற்ற பாஜக முயன்று வருவதாக ராகுல் சாடியுள்ளார். இதற்கு தமி ழக பாஜக தலைவி தமிழிசை பதி லடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் தமிழகத் தில் இந்தி மொழி திணிக்கப் பட்டதாக அவர் கூறியுள்ளார். "தமிழ் அழகான மொழி, தமி ழர்கள் நல்லவர்கள் என்பதெல்லாம் ராகுல் காந்திக்கு இப்போதுதான் தெரிந்து இருக்கிறது. என் தாய் மொழி தமிழை அழகான தமிழ் மொழி என்று பாராட்டியதற்காக மகிழ்கிறேன்," என்று செய்தியாளர் களிடம் பேசுகையில் தமிழிசை தெரிவித்தார்.

இந்தி திணிப்பிலிருந்து விடுபடவும் அன்னை தமிழுக்காகவும் போராடிய தமிழர்களைச் சுட்டுக் கொன்றது காங்கிரஸ் ஆட்சி என்று குறிப்பிட்ட தமிழிசை, அழகான தமிழ்பேசும் அழகிய தமிழர்களை இலங்கையில் பலி கொடுத்து காங்கிரஸ் கட்சி தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டது எனச் சாடினார். "தமிழுக்கும் தமிழர்களுக்கும் பச்சைத் துரோகம் செய்துவிட்டு அன்னைத் தமிழையும் தமிழர்க ளையும் காக்க வந்தவர்கள்போல் பகல் வேடம் போடவேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு மறுக்கி றது. அங்கு காங்கிரஸ் ஆட்சி தானே நடக்கிறது? அதுகுறித்து ராகுல் வாய்திறக்காதது ஏன்?" என்றும் அவர் கேட்டார்.