திமுக தலைவர் கருணாநிதி கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அவரை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அங்கு சில நிமிடங்கள் இருந்த கருணாநிதி, பின்னர் கோபாலபுரம் இல்லத்திற்குத் திரும்பினார். ஓய்வில் இருக்கும் கருணாநிதி, கடந்த ஓராண்டில் அண்ணா அறிவாலயம் வந்தது இது இரண்டாவது முறை. இதற்கிடையே, கருணாநிதி நாளிதழ் படிக்கும் புகைப்படம் ஒன்றையும் திமுக தலைமை நேற்று வெளியிட்டது. கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவது திமுகவினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
படம்: சதீஷ் தினகரன்

