ஜெயலலிதா சமாதியில் சசிகலாவுடன் தினகரன்

ஜெயலலிதா சமாதியில் சசிகலாவுடன் தினகரன்

1 mins read
015e46e8-7298-4df0-937b-f94299e0c371
-

சென்னை: புதுக்கட்சி தொடங்கி உள்ள டிடிவி தினகரன் மீது சசி கலா கடும் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கவலைக்கிடமாக உள்ள தமது கணவரைக் காண பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா பரோலில் வெளிவருவார் என எதிர்பார்க் கப்படுகிறது. அவ்வாறு சிறை விடுப்பில் அவர் வெளியே வரும் போது அரசியல் களத்தில் அதிர்வலைகள் ஏற்படக்கூடும் என தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி உள்ளார் தினகரன். எம்ஜிஆர், திராவிடம் ஆகிய சொற் கள் கட்சிப் பெயரில் இடம்பெற வில்லை என்பது அவரது ஆதர வாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தினகரனின் தீவிர ஆதரவாள ராக இருந்த நாஞ்சில் சம்பத், அவரது அணியில் இருந்து விலகியுள்ளார். மேலும் சிலரும் விலக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இளவரசி, திவாகரன் ஆகியோரின் வாரிசுகளும் தினகரனின் செயல் பாடுகளால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் இருந்தபடி தினகரனின் புதுக்கட்சி தொடக்க விழாவை தொலைக்காட்சியில் கண்ட சசி கலா, கொந்தளித்துப் போனதாகக் கூறப்படுகிறது. அரசியல், குடும் பம், சொத்து விவகாரங்கள் தொடர்பாக தாம் கூறிய ஆலோச னைகளை தினகரன் புறக்கணித்து விட்டார் என தம்முடன் இருக்கும் இளவரசியிடம் அவர் கோபத்துடன் குறிப்பிட்டதாக தமிழக ஊடகம் தெரிவிக்கிறது.