வேலூர்: தமிழக எம்பிக்களின் ஆதரவு இருந்தால்தான் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மத்தியில் பாஜக ஆட்சி நீடிக்கும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். எனவே பாஜகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என வேலூரில் செய்தி யாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார். "ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ திட்டம், நீட் தேர்வு போன்றவற்றை தமிழகத்துக்குக் கொண்டு வரக் கூடாது என வற்பு றுத்தி நிறைவேற்றிட இதுவே நல்ல தருணமா கும். இதைச் செய்தாலே தமிழக அரசுக்கு நற்பெயர் ஏற்படும். "எனவே, தமிழகத்துக்கு நல்லது செய்திட முதல்வ ருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
திராவிட நாடு தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறிய கருத் தையே நானும் வழிமொழி கிறேன்," என்றார் வைகோ. இதற்கிடையே, மதுரையில் செய்தியாளர் களிடம் பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீர மணி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் பாரதிய ஜனதா அரசு தமிழகத்தை பாலைவன மாக்க முயற்சி செய்து வருவதாகச் சாடினார். காவிரி படுகையில் கெயில் குழாய் பாதை திட்டத்தைக் கைவிடா விடில் போராட்டம் நடத்தப் படும் என்று அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

