கரூர்: தனியார் பலதுறைத் தொழிகல்லூரியில் கடந்த 1984 முதல் 1987ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி கரூரில் நடந்தது. இதில் முன்னாள் மாணவரான திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி உள்பட 45 பேரும் அவர்களுக்கு வகுப்பு எடுத்த முன்னாள் ஆசிரியர்கள் எட்டுப் பேரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் கந்தசாமி, தாம் வாழ்க்கையில் உயர ஆசிரியர்களே காரணம் என்றார். பின்னர் மேடையில் உள்ள ஆசிரியர்கள் காலில் விழுந்து வணங்கினார். இதனைச் சற்றும் எதிர்பாராத முன்னாள் ஆசிரியர்கள் கண்கலங்கினர்.
தன் ஆசிரியர் காலில் விழுந்த மாவட்ட ஆட்சியர்
1 mins read

