சோனியா, ராகுல் ரூ.10 கோடியை செலுத்த உயர் நீதிமன்றம் ஆணை

சோனியா, ராகுல் ரூ.10 கோடியை செலுத்த உயர் நீதிமன்றம் ஆணை

1 mins read

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கை விசாரித்த உயர் நீதி மன்ற நீதிபதிகள், சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் சொந்தமான 'யங் இந்தியன்' நிறுவனத்தை ரூ.10 கோடியை செலுத்தும்படி உத்தரவிட்டனர். முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் சுதந்திரப் போராட்ட காலத்தில் நிறுவப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை 2008ஆம் ஆண்டு முதல் கடன்சுமை கார ணமாகத் தனது பதிப்பை நிறுத்தி விட்டது.

இந்நிலையில் 2010ஆம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவ ருடைய மகன் ராகுல் காந்தி ஆகியோர் ரூ.50 லட்சம் முத லீட்டில் 'யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தைத் தொடங்கினர். இதைத்தொடர்ந்து இந்நிறு வனத்திற்கு சொந்தமான பங்கு களை ராகுலும் சோனியாவும் முறைகேடாகப் பெற்றதாகக் கூறி, பா.ஜனதா மூத்த தலைவர் சுப் பிரமணிய சாமி தொடுத்த புகார் தொடர்பில் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. விசாரணையில் சோனியா, ராகுலுக்குச் சொந்தமான 'யங் இந்தியன்' நிறுவனம் ரூ.249 கோடியே 15 லட்சம் வருமான வரி செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதனை எதிர்த்து 'யங் இந்தியன்' தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ரவீந்திர பட், ஏ.கே. சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, ரூ.10 கோடி பணத்தை வைப்புத் தொகையாக செலுத்து மாறு 'யங் இந்தியன்' நிறுவனத் துக்கு நேற்று உத்தரவிட்டனர். ரூ.10 கோடி செலுத்துவதை பொறுத்து, ரூ.249 கோடியை செலுத்த வருமான வரித்துறை வற்புறுத்தாது என்றும் நீதிபதிகள் கூறினர்.