புதுடெல்லி: தமிழகத்தில் குடிநீரை விலைக்கு வாங்கிக் குடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள் ளார். இதே நிலை நீடிப்பது நல்ல தல்ல என்று நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார். "உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண் டும். மத்திய அரசு இது தொடர் பாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், தமிழகம் வரும் காலத்தில் பாலைவனமாக மாறிவிடும். இதில் சிறிதளவும் சந்தேகம் கிடையாது," என்றார் திருநாவுக் கரசர்.
காங்கிரஸ் கட்சியின் மூன்று நாள் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடு என்றார். "இது குறித்து காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் வகுக்கப் பட்டுள்ளது. வாக்குச்சீட்டு முறை யில் தேர்தல் நடந்தால் முறை கேடுகள் நடக்காது. பாஜகவினர் வாக்கு இயந்திரத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகளை அரங் கேற்றி வருகின்றனர். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்," என்றார் திருநாவுக்கரசர்.<ப்> திருநாவுக்கரசர். படம்: ஊடகம்

