மதுரை: திமுக முன்னோடிக ளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவைப் போன்று இந்தியாவில் வேறு எங்கும் நடப்பதில்லை என உதயநிதி ஸ்டாலின் கூறினார். மதுரையில் நடைபெற்ற பொற்கிழி வழங்கும் விழாவில் பேசிய அவர், இதுபோன்று தமிழகம் முழுவதும் விழாக்கள் நடத்தப்பட வேண்டும் என்றார். மாநிலம் முழுவதும் உள்ள திமுக மூத்த உறுப்பினர்கள் பயன் அடையும் வகையில் ஒரு திட் டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது குறித்து கட்சித் தலைமையிடம் தெரிவிக்க இருப்பதாகக் குறிப்பிட் டார்.
"புதிய திட்டமானது மூத்த உறுப்பினர்களின் மருத்துவச் செலவுக்குப் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். மூத்த உறுப்பி னர்களை நேரடியாக சந்திப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. "தாத்தா (கருணாநிதி) எப்போது வருவார் என்று தொண்டர்கள் ஆவலோடு என்னிடம் கேட்டு வருகின்றனர். அது நெகிழ்ச்சி அளிக்கிறது," என்றார் உதயநிதி. தன்னைப் பார்த்துப் பலரும் எரிச்சல் அடைவதாகக் குறிப்பிட்ட அவர், கட்சிப் பொறுப்புகளை ஏற்பதற்காகவே தாம் அரசியலுக்கு வந்ததாகக் கூறப்படுவது தவறு என்றார். "நான் பிறந்தது முதற்கொண்டே திமுக தொண்டன். பெரியார், அண்ணாவை நான் பார்த்ததில்லை. மூத்த கழக முன்னோடிகளை அவர்களின் உருவமாகப் பார்க்கி றேன்," என்றார் உதயநிதி.