பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் தமிழக விவசாயிகள்: விஜயகாந்த்

பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகும் தமிழக விவசாயிகள்: விஜயகாந்த்

1 mins read
8212cf90-28e2-4979-bfdd-a40c4bcc8cf1
-

சென்னை: விவசாயிகளின் வாழ் வாதாரத்தைக் காக்க தமிழக அரசு உடனடியாக உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றில் கைவைக்க முடியும் எனும் கூற்றை தமிழக ஆட்சியாளர்கள் நினைவில் கொண்டு செயல்பட வேண்டும் என அவர் அறிக்கை ஒன்றில் வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தில் விவசாயிகள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளா வதாகவும், விவசாயிகள் இதை நினைத்து மனம் குமுறுவதாகவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

"நெல் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்ய காலதாமதம் செய்வதற்காக, ஈரப்பதம் உள்ளது என்றும், பதர் நிறைந்துள்ளது என்றும் காரணம் காட்டி காக்க வைக்கிறார்கள். "நெல் மூட்டைகளின் தரத்தைக் குறைத்துச் சொல்வது, பின்னர் அந்த மூட்டைகளை எடை போடுவதற்கு 40 முதல் 50 ரூபாய் வரை கையூட்டு கேட்பது போன்ற பல துன்பங்களுக்கு விவசாயிகள் ஆளாகின்றனர்," என்று விஜயகாந்த் தெரிவித் துள்ளார்.

விஜயகாந்த். படம்: இணையம்