சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூத னன் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனை காரணமாக அக்கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவியது. மதுசூதனன் வீட்டில் அரிபிரபு என்பவர் வாட கைக்கு குடியிருக்கிறார். இவர் சுங்கத்துறை முகவ ராகப் பணியாற்றுகிறார். வெளிநாடுகளில் இருந்து இவர் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்தே சுங்கத் துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை நடத் தியதாகத் தெரிகிறது. அதி காரிகள் முக்கிய ஆவணங் களைப் பறிமுதல் செய்துள் ளனர். மேலும் அரிபிரபுவை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மதுசூதனன் வீட்டுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

